துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா | ஓடிடி-யில் வெளியாக உள்ளதா மாஸ்டர்? |
கொரோனா, வெட்டுக்கிளி என உலகம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அதிகம் கண்டெண்ட் கொடுத்தது நடிகர் சூர்யாவின் படங்கள் தான். அவரது ஏழாம் அறிவு மற்றும் காப்பான் படங்களில் இது போன்ற சமூக பிரச்சினைகள் பேசப்பட்டிருந்ததால், சூர்யா முன்கூட்டியே அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என ஒரு காட்டு காட்டி விட்டார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
இதனாலேயே ஊடகங்களில் சூர்யா படங்கள் பற்றி அதிகம் பேசப்பட்டது. அதோடு அடுத்ததாக அவர் என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது.
இந்நிலையில் சூர்யா அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று படத்தை முடித்துள்ள சூர்யா அடுத்து வாடிவாசல், அருவா என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அப்படங்களின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினை முடிந்தபிறகு தான் ஆரம்பமாகும்.
இதற்கிடையே சூர்யா ஓடிடி-யில் வெளியாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பதற்காக வாங்கவுள்ள சம்பளம் முழுவதையும் அனாதை இல்லத்திற்கு நிதியுதவியாக அளிக்க சூர்யா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
9 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் ஒவ்வொன்றையும் ஒரு இயக்குநர் என ஒன்பது இயக்குனர்கள் இயக்குகின்றனராம். அவர்களில் இயக்குனர் மணிரத்னமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் இந்த வெப் சீரிஸ் மூலம் இயக்குனர்களாக அறிமுகமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சூர்யா நடிக்க உள்ள பெரும் பகுதியை, சித்தார்த்தின் 180 படத்தை இயக்கிய ஜெயேந்திரன் பஞ்சாபிகேஷன் என்பவர் இயக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.