ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா |
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகைகளில் சிறப்பாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்கு முதலிடத்தைத் தரலாம். அதற்கான சான்று தான் 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல்.
அந்தப் பாடல் சாதனை புரிவதற்கு முன்பாகவே தெலுங்கில் சாய் பல்லவி நடித்த 'பிடா' படப் பாடலான 'ஒச்சிந்தே' பாடல் தான் யு டியுபில் முதலிடத்தில் இருந்தது. அப்பாடலில் சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை அதிகம் கவர்ந்ததால்தான் அது அவ்வளவு பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த அளவிற்கு நளினமான, வேகமான நடனத்தை ஆடுபவர் எனப் பெயர் பெற்றவர் சாய் பல்லவி.
'பிடா' படத்தை இயக்கிய சேகர் கம்முலா இயக்கத்தில் தற்போது சாய் பல்லவி, நாக சைதன்யா நடித்து வரும் படம் 'லவ் ஸ்டோரி'. இந்தப் படத்தில் இடம் பெற உள்ள ஒரு பாடலுக்கான நடனத்தை அமைக்கும்படி சாய்பல்லவியிடம் இயக்குனர் சேகர் கேட்டுக் கொண்டுள்ளாராம். அதற்கு சாய் பல்லவி சம்மதித்துவிட்டாரா எனத் தெரியவில்லை, ஆனாலும் டோலிவுட்டில் இந்த செய்தி பரவியுள்ளது.