மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
மரங்கள் அதிகமாக இருந்தால்தான் மழையும் அதிகமாக வரும் என நம் முன்னோர்கள் எப்போது சொல்லி இருக்கிறார்கள். நகர மயமாக்கலில் பல மரங்கள் காணாமல் போய்விடுகின்றன. இருந்தாலும் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் பலரும் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' என்ற திட்டத்தின் மூலம் மரங்களை நடுவதை ஆரம்பித்து ஊக்கப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நாகார்ஜுனா, பிரபாஸ், சமந்தா ஆகியோரும் இந்த சவாலை ஏற்று மரங்களை நட்டு, மற்றவர்களையும் மரம் நடும் சவாலுக்கு அழைத்தனர்.
தமிழில் 'எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படங்களின் நாயகனான தெலுங்கு நடிகர் சர்வானந்த் இந்த சவாலை ஏற்று நேற்று மரங்களை நட்டார். அதோடு அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவையும் தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
“நமது எதிர்கால சந்ததியினருக்காக ஒவ்வொருவரும் இந்த மரம் நடுதலைக் கொண்டு செல்ல வேண்டும் என நினைக்கிறேன். இதைச் செய்வது மிகவும் அழகானது” என சர்வானந்த் தெரிவித்துள்ளார்.