பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
மலையாளத்தில் பிரபலமான குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். 3 வயதில் சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்தார். இதுதவிர பாஸ் என்கிற பாஸ்கரன், நானும் ரவுடிதான், மிருதன் படங்களில் நடித்தார்.
தற்போது 15 வயதாகும் அனிகா ஹீரோயினாக நடிக்க தயாராகிவிட்டார். இதனால் அவர் தனது தோற்றத்தை போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டார். அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. மலையாள படம் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம் பள்ளி மற்றும் கல்லூரி காதலை மையமாக கொண்டது. தமிழிலும் வாய்ப்பு தேடி வருகிறார் அனிகா.