Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள்: தலைவன் - ஜேம்ஸ்பாண்ட் எம்.ஜி.ஆர்

13 ஜூலை, 2020 - 14:09 IST
எழுத்தின் அளவு:
Flashback-about-Thalaivan-film

ஹாலிவுட்டில் பிரபலமாகிக் கொண்டிருந்த ஜேம்ஸ் பாண்ட் படங்கள் இந்தியாவிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதனால் இங்குள்ள ஹீரோக்களுக்கும் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் ஜெய்சங்கரை வைத்து அந்த மாதிரி படங்களை தயாரித்தது.

எம்.ஜி.ஆருக்கும் அந்த மாதிரி ஆசை வந்தது. பின்னாளில் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான படம். அதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த படம் தலைவன்.

எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் துப்பறியும் கலையை படித்து விட்டு இந்தியா வரும் ஒரு டிடெக்டிவ் ஏஜண்ட். அவரிடம் அபாரமான யோகா சக்தி இருக்கும். அதாவது தரையில் இருந்து பல அடி உயரத்தில் அந்தரத்தில் யோகா செய்வார். பெரும் பணக்காரர்களை பெண்களை வைத்து மயக்கி பின்பு அவர்களை கடத்தி பணம் பறிக்கும் வில்லன் நம்பியாருக்கு எம்.ஜி.ஆரிடம் இருக்கும் இந்த சக்தியை வைத்து பணம் சம்பாதிக்க ஆசை. ஆனால் எம்.ஜி.ஆரோ நம்பியாரை உரிய ஆதாரத்துடன் கைது செய்ய வந்திருக்கிறவர். இந்த இருவருக்கும் இடையிலான பரபரப்பான மோதல்தான் படம்.

எம்.ஜி.ஆர் ஜேம்ஸ்பாண்ட் போன்றே படம் முழுக்க கோட்சூட், கருப்பு கண்ணாடி, கையில் ஒரு சூட்கேசுடன் வருவர். இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் நம்பியார், அசோகன், நாகேஷ், வாணிஸ்ரீ, ஜோதிலட்சுமி, மனோரமா, சகுந்தலா நடித்திருந்தார்கள். பிரபல மலையாள இயக்குனர் பி.ஏ.தோமஸ் தயாரித்து இயக்கி இருந்தார். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அமிதாப், 'பாசிடிவ்' ஆனவர்!அமிதாப், 'பாசிடிவ்' ஆனவர்! கட்டாயத்துக்காக நடிக்க மாட்டேன்: ஸ்ரேயா ரெட்டி கட்டாயத்துக்காக நடிக்க மாட்டேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vaduvooraan - Chennai ,இந்தியா
15 ஜூலை, 2020 - 17:47 Report Abuse
Vaduvooraan காமிராவை ஓடவிட்டு விட்டு ஏதாவது பேசுங்கள், ஆடுங்கள் , பாடுங்கள் ..அப்புறம் பார்த்துக்கலாம் என்று டைரக்டர் டீ சாப்பிட போயிருக்கலாம் அல்லது கவிழ்ந்தடித்து தூங்கியிருக்கலாம். அந்த அளவு சீனுக்கு சீன் அல்ல ...ஷாட்டுக்கு ஷாட் துண்டு துண்டாக தனியே நிற்கும் இந்தப் படம் ரொம்ப வருடங்கள் தயாரிப்பில் இருந்து பிறகு ரிலீஸ் செய்யப்பட்டது. எடிட்டர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்று சந்தேகிக்க வைத்த படம். இதே தயாரிப்பாளர் எம்ஜியாரை வைத்து கலைஞர் கதை வசனத்தில் ஏசுநாதர் என்ற படத்தை தொடங்கி கிறித்தவ அமைப்புகள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது என்பது தனிக்கதை
Rate this:
13 ஜூலை, 2020 - 20:17 Report Abuse
rasheed ஜேம்ஸ் பாண்டு அந்த காலத்தில் பிரபலம் மிகவும் ரசித்த படங்கள் ரஷீத்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in