Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுஷாந்த் நினைவாக மாற்றப்பட்ட தெருப் பெயர்

13 ஜூலை, 2020 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Street-name-change-to-Sushant-name

தோனி, தில்பேச்சரா திரைப்பட நடிகரான சுஷாந்த் சிங் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சியுற வைத்தது. குறிப்பாக, அவரது சொந்த மாநிலமான பீகார் மக்கள் அதிக அதிர்ச்சியடைந்தனர்.

ஹிந்தித் திரையுலகில் வேற்று மாநிலத்தவர் பிரபலமாவது அதிகம் நடக்காது. ஆனால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் சிங் தோனி படத்தின் மூலம் அதிகப் பிரபலமடைந்தார்.

தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவரை கௌரவிக்கும் விதத்தில் சுஷாந்த் சிங் சொந்த ஊரான புர்னியா நகர மக்கள் ஒரு தெருப்பெயரையும், ஒரு சவுக்கையும் சுஷாந்த் நினைவாக வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை அந்நகர முனிசிபல் கார்ப்பரேஷன் நிறைவேற்றி உள்ளது.

போர்டு கம்பெனி சவுக் என்ற இடம் தற்போது சுஷாந்த் சிங் சவுக் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நகரத்தில் மதுபானி என்ற இடத்திலிருந்து மாதா சவுக் வரை செல்லும் தெருவிற்கு சுஷாந்த் சிங் பெயர் வைக்கப்பட்டுள்ளது. புர்னியா நகர மேயர் சவிதா தேவி அந்த இரண்டு பெயர் பலகைகளையும் திறந்து வைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு சாதனை படைத்த தில் பேச்சரா டிரைலர்மீண்டும் ஒரு சாதனை படைத்த தில் ... ஆன்லைனில், ஒன்பது குழி சம்பத் ஆன்லைனில், ஒன்பது குழி சம்பத்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aarkay - Pondy,இந்தியா
15 ஜூலை, 2020 - 14:35 Report Abuse
Aarkay நல்லது கேட்டதை பகிர்ந்து கொள்ள நண்பனோ, உறவோ வேண்டும். எல்லைகளை சுருக்கிக்கொண்டபின், இறக்கிவைக்க தோள்கள் கிடைப்பதில்லை. திரை உலகில், நிறைய முகமூடி அணிந்த போலி மனிதர்களைத்தான் பார்க்க முடியும். சொந்தமே என்றும், நிரந்தரம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in