Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா": நா.முத்துகுமாருக்கு மகன் எழுதிய பிறந்தநாள் கவிதை

12 ஜூலை, 2020 - 19:36 IST
எழுத்தின் அளவு:
Na.Muthukumars-son-poet-to-his-dad

தனது முத்தான வரிகளால் தமிழ் சினிமா பாடல்களில் ஆனந்த யாழை மீட்டியவர் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார். இன்று அவருக்கு பிறந்தநாள். இதையொட்டி அவரது மகன் ஆதவன் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். ஆதவனின் அந்த கவிதை...

"என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா".

இவ்வாறு மழலை கவிஞர் ஆதவன் முத்துகுமார் தனது தந்தைக்கு கவிதை எழுதியிருக்கிறார். இதன் மூலம் புலிக்கு பிறந்தது பூனையாகுமா எனும் தமிழ் சொலவடையை மெய்ப்பித்திருக்கிறார் ஆதவன்.

பொதுவாகவே முத்துகுமாரின் திரைப்பாடல்களில் உறவுகளின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தியிருப்பார். அவரை போலவே ஆதவன் முத்துகுமாரும் தனது கவிதையில் தந்தைக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட கரை ஒதுங்கும் விஜய் மில்டன்கன்னட கரை ஒதுங்கும் விஜய் மில்டன் அமலா பால் கண்ணீர் அமலா பால் கண்ணீர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mahesh - chennai,இந்தியா
14 ஜூலை, 2020 - 09:46 Report Abuse
Mahesh முத்து குமார் அவர்கள் ஒரு பத்திரிக்கையில் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதை படித்த பொது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். மிகவும் அருமையான பாடலாசிரியர்.
Rate this:
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஜூலை, 2020 - 13:30 Report Abuse
Syed Mustafa பேரிழப்பு , இந்த வயதில் தந்தையை இழந்து நிற்கும் உனக்கு கடவுள் துணையிருப்பார் . தந்தையை போல் பெயரும் புகழும் அடைய வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in