பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் விஜய் மில்டன். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அந்த படம் தோல்வி அடையவே மீண்டும் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தினார்.
பல வருட இடைவெளிக்கு பிறகு கோலிசோடா படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் இயக்கிய பத்து எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 படங்கள் வெற்றி பெறவில்லை. அவர் இயக்கி உள்ள யார் இவன் படம் வெளிவராமல் இருக்கிறது. இதனால் மீண்டும் ஒளிப்பதிவில் கவனம் செலுத்துகிறார்.
இந்த நலையில் அவர் கன்னடத்தில் டகரு என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது. இதனால் இப்போது இயக்குனராகவும் கன்னடத்தில் களம் இறங்குகிறார். டகரு படத்தில் நடித்த சிவராஜ்குமார், தனஞ்செயா நடிக்கிறார்கள். சிவராஜ்குமாரின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பு இன்று முறைப்படி வெளியிடப்பட்டது.