Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலைத் தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு ரஜினியும் உதவி

12 ஜூலை, 2020 - 17:39 IST
எழுத்தின் அளவு:
Rajini-also-helps-to-actor-Ponnambalam

தமிழ் சினிமாவில் சண்டைக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் வில்லன் நடிகரானவர் பொன்னம்பலம். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , கன்னடம் , மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பொன்னம்பலம். தினமும் அவரிடம் போனில் நலம் விசாரித்து வரும் நடிகர் கமல், மருத்துவ செலவிற்கும் உதவி வருகிறார். கூடவே பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவையும் கமலே ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.

தற்போது பொன்னம்பலத்தின் உடல்நிலை மோசமாக உள்ளதால், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான செலவை ரஜினி ஏற்றுக் கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

பொன்னம்பலம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே குடிப்பழக்கத்தால் தனது சிறுநீரகம் 40 சதவீதமும், ஈரல் 70 சதவீதமும் சேதமடைந்து விட்டது என்று சென்றாயனிடம் கூறி வருத்தப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ராய், மகளுக்கும் நோய் தொற்று - பாலிவுட் பிரபலங்களை மிரட்டும் கொரோனாஐஸ்வர்யா ராய், மகளுக்கும் நோய் ... இந்தியன் 2-வில் காஜலின் பிகினி ட்ரீட் இந்தியன் 2-வில் காஜலின் பிகினி ட்ரீட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Rangaraj - Coimbatore,இந்தியா
17 ஜூலை, 2020 - 22:23 Report Abuse
Rangaraj நல்ல நடிகர் ஆனமீகவாதி குடியால் ஆரோக்கியம் கெட்டது தான் மிச்சம் நிச்சயம் நலமடைவார் நல்லவர்
Rate this:
S.P. Barucha - Pune,இந்தியா
14 ஜூலை, 2020 - 17:36 Report Abuse
S.P. Barucha சோற்று கற்றாழை அதனுடன் கடுக்காய்பொடி சேர்த்து சாப்பிட பழுதுபட்ட சிறுநீரகம் சரியாகும். முயற்சி செய்து பார்க்கலாமே.உடன் பிறந்த சகோதரிகளுக்காக பணம் சம்பாரிப்பதாக படித்த ஞாபாகம் . குணமடைய இறைவனை எல்லாருமே பிரார்த்திப்போம்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
14 ஜூலை, 2020 - 19:16Report Abuse
Aarkayavargalukkaagathaan.........
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
13 ஜூலை, 2020 - 23:49 Report Abuse
Aarkay எல்லாம் பழக்க வழக்கங்களால் வரும் வினை
Rate this:
12 ஜூலை, 2020 - 20:57 Report Abuse
rasheed ரஜினி உதவி என்பது தேவை இல்லை விளம்பரம் பொன்னம்பலம் இன்சூரன்ஸ் இல்லையா அவர்கள் இடம் பனம் இல்லையா எத்தனை படம் நடித்து இருப்பார் நம்ப முடியலையோ ரஷீத்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in