Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா ராய், மகளுக்கும் நோய் தொற்று - பாலிவுட் பிரபலங்களை மிரட்டும் கொரோனா

12 ஜூலை, 2020 - 15:34 IST
எழுத்தின் அளவு:
Corona-positive-to-Aishwarya-rai-and-her-daughter

கொரோனா நோய் தொற்று உலகையே மிரட்டி வரும் சூழலில், இந்தியாவில் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் மும்பையில் அதிகம் வசிக்கும் பாலிவுட் பிரபலங்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவது அங்குள்ள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



மூத்த நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் அவரும், அவரது மகனும் குணமாக வேண்டி பல பாலிவுட் மற்றும் இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்தி உள்ளனர்.




இந்நிலையில் அமிதாப் பச்சனின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் இந்நோய் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அமிதாப்பின் மருமகளும், அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கும் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

பாலிவுட்டின் மற்றுமொரு மூத்த நடிகரான அனுபம் கெர், அவரது தாய் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுபம் கெர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர், தனக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததாகவும் கூறியுள்ளார்.




இதேப்போன்று நடிகை ரேகாவின் இல்ல பாதுகாவலர் ஒருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரின் பங்களாவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்களின் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுவது பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ராதே ஷ்யாம் போஸ்டர் ; அசாம் போலீஸாரின் குறும்புராதே ஷ்யாம் போஸ்டர் ; அசாம் ... கமலைத் தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு ரஜினியும் உதவி கமலைத் தொடர்ந்து பொன்னம்பலத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

12 ஜூலை, 2020 - 20:44 Report Abuse
rasheed வருத்தம் காரோண காலத்தில் கவனமா இருக்கலாம் வீண் பிரச்சனை நீங்கள் எல்லாம் வைரங்கள் வைரம் என்றும் மடிப்பு குறையாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in