Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிராமங்களில் கொரோனா அதிகரித்தால் நாட்டுக்கு ஆபத்து: கமல்ஹாசன்

12 ஜூலை, 2020 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Kamalhassan-feel-about-corona-spreading-to-village

தற்போது நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது நாட்டுக்கே ஆபத்தானது என்கிறார் கமல்ஹாசன் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது.

நகரங்களில் பரவலான ஆய்வுகள் மூலம் நோய்த் தொற்று இருப்பதை ஆராயும் அரசு, கிராமப்புறங்களின் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும். நோய்த்தொற்று கண்டறிதல், அதற்கான சிகிச்சைகள், அது குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் கிராமங்களில் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் வந்திருப்பதற்கு காரணமே கிராமங்களை அரசு இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டதே காரணம்.

தமிழகத்தில் பல கிராமங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள், மருத்துவ ஊழியர்களோ இன்றிதான் செயல்படுகிறது. பல நவீன மருத்துவமனைகளைக் கொண்ட பெரும் நகரங்கள் கொரோனாவின் தாக்கத்தில் தள்ளாடும்போது ஆரம்ப சுகாதார மையங்கள், நோய்த்தொற்று அதிகரித்தால் என்னவாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

முறையான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார மையங்கள், அது இல்லையென்றால் அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கும் கிராமங்களில் இந்த கொரோனா தொற்று வருமுன் தடுக்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயம் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.

கிராமங்களில் இத்தொற்று பரவினால் நம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பொருளாதார அளவில், மருத்துவ அளவில் மட்டுமல்ல அடிப்படைத் தேவைகள் கூட கிட்டாத அளவிற்கு செல்லக் கூடும்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என பாடப்புத்தகத்தில் மட்டும் சொல்லாமல், செயலில் காண்பித்து, கிராமங்கள் இத்தொற்று பரவலில் சிக்காமல் இருக்க விரைந்து காத்திடுவது நம் கடமை.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அமிதாப் குணமடைய ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துஅமிதாப் குணமடைய ரஜினி, கமல் உள்ளிட்ட ... 83வது பிறந்த நாள்: தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் 83வது பிறந்த நாள்: தென்னகத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sivaraman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29 ஜூலை, 2020 - 17:41 Report Abuse
sivaraman இவர் போன்ற அறிவு ஜீவிகளின் ஆலோசனைகளை அவ்வப்போது கேட்காவிட்டால் நாடு பேரழிவை சந்திப்பது நிச்சயம். இந்த கருத்து நாட்டை ஆள்பவர்களின் கவனத்துக்கு செல்லுமா என்று நினைக்கும் பொழுது மிக்க கவலை அடைகிறேன்.
Rate this:
13 ஜூலை, 2020 - 16:19 Report Abuse
K. R. RAMAKRISHNAN ஐயா நீங்கள் கோரெனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் உலகத்தை விட்டே ஒழித்து விடலாம். வை கோ அய்யாவையும் துணைக்கு அழைத்து செல்லவும்.
Rate this:
g g -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜூலை, 2020 - 15:25 Report Abuse
g g thalaivare...arikkai vittadhu podhum..kalathula erakkunga.
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜூலை, 2020 - 14:00 Report Abuse
swa why cant I give a solutionthangal nattuke abathu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in