Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமிதாப் குணமடைய ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

12 ஜூலை, 2020 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Amithabh-hospitalised-due-to-corona---Celebrties-wish-him-to-recover-soon

கொரோனா பாதிப்பிற்குள்ளான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குணமடைய ரஜினி, கமல், தனுஷ், மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்தி உள்ளனர். அவர் குணமடைய வேண்டும் என பிரார்த்தனையும் நடக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா பிரச்னை ஆட்டி படைக்கிறது. இந்தியாவிலும் இதன் தீவிரம் குறையாத நிலையில் ஹிந்தி நடிகர்கள் அமிதாப், அபிஷேக் ஆகியோரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி, மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அமிதாப்பை டுவிட்டரில் பின் தொடர்பவர்கள், ரசிகர்கள் அவரும், அவரது மகனும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனுஷ், மாதவன், அக்சய்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அவர்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.

போனில் நலம் விசாரித்த ரஜினி
அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி அறிந்த நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக தொலைப்பேசி வாயிலாக அவரிடம் உடலம் நலம் பற்றி விசாரித்துள்ளார்.

வீடு திரும்புவார்கள் - கமல்
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ''அமிதாப், அபிஷேக் ஆகிய இருவரும் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவிப்பதாகவும், இந்திய டாக்டர்கள் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதால் விரைவில் அவர்கள் குணமாகி வீடு திரும்புவார்கள். அமிதாப் குணமாகி இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நாங்க வெளியூரு போயிட்டா ஊரே லாக்டவுன் - பூரிப்பில் சூரிநாங்க வெளியூரு போயிட்டா ஊரே ... கிராமங்களில் கொரோனா அதிகரித்தால் நாட்டுக்கு ஆபத்து: கமல்ஹாசன் கிராமங்களில் கொரோனா அதிகரித்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

VELAN S - Chennai,இந்தியா
12 ஜூலை, 2020 - 18:34 Report Abuse
VELAN S பாருங்க , இது எப்படி பட்ட கரோனா என்று , அதாவது நீ டாஸ்மார்க் குக்கு போனா கரோனா வராது , ஏன்னா நீ உள்ள போட்ட சாராயம் கிருமி நாசினியா வேலை செய்து உன்னை கரோனாவிலிருந்து காப்பாற்றி விடும் , ஆனா , மவனே நீ மட்டும் பழக்கடை போய் ஆப்பிள் சாப்பிட்ட என்று வை அந்த ஆப்பிளில் ஒட்டியிருக்கும் கரோனா வைரஸால் உன் உயிர் போய் விடும் , எப்படி போகுது பார் இந்த கரோனா கதை . என்னைக்கு இந்த தலையெழுத்து கரோனா ஒழியுமோ .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in