Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விவேக் ஓபராய்க்கு பதிலாக வில்லனாகும் ரகுமான்

11 ஜூலை, 2020 - 18:31 IST
எழுத்தின் அளவு:
Rahman-will-act-in-Vivek-oberoi-film

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் லூசிபர்.. மோகன்லால் நடித்திருந்த இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண் தனது தந்தை சிரஞ்சீவியை வைத்து தயாரிப்பதற்காக கைப்பற்றியுள்ளார்.. பிரபாஸ் நடித்த சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் தான் இந்த படத்தின் ரீமேக்கை தெலுங்கில் இயக்கப்போகிறார். இந்த ஊரடங்கு சமயத்திலேயே இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வுகளையும் முடித்துவிடும் வேலைகளில் இறங்கியுள்ளார் இயக்குனர் சுஜீத்.

அந்தவிதமாக தற்போது இந்த படத்தில் நடிகர் ரகுமான் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. லூசிபர் ஒரிஜினலில் இந்த கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்திருந்தார். மஞ்சு வாரியரின் கணவராக நடித்திருந்த அவர் இந்தப்படத்தில் ஸ்டைலிஷான வில்லத்தனத்தை காட்டி இருந்தார். அதனால் தெலுங்கு ரீமேக்கிலும் அவரையே நடிப்பதற்காக அணுகியபோது, ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தில் திரும்ப நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறி மறுத்து விட்டாராம். அதன்பிறகு அதே போன்ற ஒரு ஸ்டைலிஷான நபர் வேண்டும் என்பதால் ரகுமானை தேடிப்பிடித்து இருக்கிறார்களாம் இந்த ரீமேக் குழுவினர்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிரித்விராஜ்-சுரேஷ்கோபி பெயர் பிரச்சனை : சுமூகமாக தீர்த்து வைத்த கதாசிரியர்பிரித்விராஜ்-சுரேஷ்கோபி பெயர் ... 'ராதே ஷ்யாம்' - சமூக வலைத்தள சாதனை 'ராதே ஷ்யாம்' - சமூக வலைத்தள சாதனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13 ஜூலை, 2020 - 04:55 Report Abuse
J.V. Iyer நல்ல சாய்ஸ். மற்ற கதாநாயகர்களை ஒப்பிடும்போது, ரகுமானுக்கு நாயகனாக நடிக்க வாய்ப்பு இல்லாததது வருத்தமே. நல்ல நடிகர், நாயகனுக்கான முகம், உடல் வாகு. என்ன செய்வது அதிர்ஷ்டம் இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in