Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசைக்கு நோ ரூல்ஸ்: ஏ.ஆர்.ரஹ்மான்

11 ஜூலை, 2020 - 15:35 IST
எழுத்தின் அளவு:
No-rules-to-Music-says-AR-Rahman

முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள தில் பெச்சாரா படத்தில் சுஷாந்த், சஞ்சனா சங்கி நடித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுஷாந்த் நடித்த படம் இது. இப்படம் தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளிவந்தது. இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வருகிற 24ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பாடல்கள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது: இந்த படத்தில் முகேஷ் சாப்ராவுடன் இணைந்தது மிகப்பெரிய அனுபவம். அவரது உற்சாகம் பிறருக்கும் தொற்றிக் கொள்ளக்கூடியது. இப்படம் மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பல இதயங்கள் நிறைந்த இப்படத்தில் தற்போது சுஷாந்த்தின் நினைவுகளும் உள்ளன.

காதல் பாடலுக்காக பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யாவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. பாடல்கள் இந்தியாவின் சிறந்த இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆல்பம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பதற்கு எந்த விதிமுறைகளும் தேவையில்லை, அது இதயம் சம்பந்தப்பட்டது. நான் பாடல்களை உருவாக்கும்போது அவைகளை சிறிது நேரம் சுவாசித்து விட்டுத்தான் இயக்குநரிடம் காண்பிப்பேன். என்கிறார் ரகுமான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளம் கற்றுக் கொள்வது கடினம்: அதிதி ராவ்மலையாளம் கற்றுக் கொள்வது கடினம்: ... 'கட்டப்பா'வாக நடிக்க வேண்டிய சஞ்சய் தத் 'கட்டப்பா'வாக நடிக்க வேண்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

11 ஜூலை, 2020 - 21:13 Report Abuse
rasheed ar ரஹமான் புகழ் பரவட்டும் நல்லது செய்ய னும் இளையராஜா வட நாடு போகல ரஷீத்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in