Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்த் சிங்கும், சுப்பலட்சுமி அம்மாவும்

11 ஜூலை, 2020 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Sushant-singh-and-Subbalakshmi-amma

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, இந்தியா முழுவதுமான ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. காரணம் கிரிக்கெட் வீரர் தோனியின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இன்னொரு தோனியாகவே இடம் பிடித்திருந்தார் சுஷாந்த். அந்தவகையில் அவருடன் நடித்தவர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள் என பலரும் சுஷாந்த்துடனான தங்களது பழைய நினைவுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த படம் 'தில் பேச்சாரே' விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரசிகர்களும் இந்தப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றனர். இந்திப்படம் என்றாலும் மலையாளத்தில் பிரபலமான 84 வயதான சுப்பலட்சுமி அம்மா என்கிற சீனியர் நடிகை சுஷாந்த் சிங்கின் பாட்டியாக இந்தப்படத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் பேரன் சுஷாந்துடன் இணைந்து இவர் ஜாலியாக நடனமும் ஆடியுள்ளார். இந்த வீடியோவையும், இருவரது புகைப்படத்தையும் சுப்பலட்சுமி அம்மாவின் பேத்தியான சௌபாக்யா வெங்கடேஷ் என்பவர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இவரும் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சடாக் பட போஸ்டரை எதிர்த்து வழக்குசடாக் பட போஸ்டரை எதிர்த்து வழக்கு ஹீரோவின் தோழிக்கு பிடிக்காததால் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ரவீணா டாண்டன் ஹீரோவின் தோழிக்கு பிடிக்காததால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in