Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்யா கெட்டப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது? விஜய் சேதுபதி விளக்கம்

11 ஜூலை, 2020 - 15:28 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-about-Sathya-getup

நடிகர் விஜய் சேதுபதியின் பழைய புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தில் அவர் சத்யா படத்தில் வரும் கமல் கெட்டப்பில் இருந்தார். இதனால் சத்யா படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், அதனால் தான் அவர் அந்த கெட்டப்புக்கு மாறியிருக்கிறார் என்றும் வதந்தி பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். அதில், "தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு மணிகண்டன் இயக்கும் படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக நான் மொட்டை அடித்திருந்தேன். அதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தான் முடிந்தது.

மணிகண்டன் இயக்கும் படத்திற்கான போட்டோஷூட் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. எனவே தலையில் முடி ஓரளவுக்கு தான் வளர்ந்திருந்தது. பிறகு சமீபத்தில் அவர் எனக்கு அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதை நான் எனது நண்பர்கள் சிலருக்கு அனுப்பினேன். அதில் ஒருவர் அந்த புகைப்படத்தை புரொபைல் போட்டோவாக வைத்திருந்தார். அப்படி தான் அந்த புகைப்படம் வெளியே பரவியிருக்க வேண்டும்", என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மிஷ்கின் தம்பி படத்திற்கு ஆரம்பமே பிரச்சினைமிஷ்கின் தம்பி படத்திற்கு ஆரம்பமே ... மலையாளம் கற்றுக் கொள்வது கடினம்: அதிதி ராவ் மலையாளம் கற்றுக் கொள்வது கடினம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in