Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சடாக் பட போஸ்டரை எதிர்த்து வழக்கு

11 ஜூலை, 2020 - 15:23 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-Sadak-2-poster

முகேஷ் பட் தயாரிப்பில் மகேஷ் பட் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளிவந்த படம் சடாக். வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் சடாக் 2 என்ற பெயரில் தயாராகிது. இதனையும் முகேஷ் பட் தயாரிக்கிறார். மகேஷ் பட் இயக்குகிறார். முதல் பாகத்தில் சஞ்சய்தத், பூஜா பட் நடித்திருந்தார்கள். இந்த பாகத்திலும் அவர்களே நடிக்கிறார்கள். டிஸ்ட்னி ஹாட்ஸ்டார் வெளியிடுகிறது.

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்படடது. இந்த போஸ்டரில் கைலாஷ் மலையும் அதன் அருகில் ஒரு தேசிய நெடுஞ்சாலையும் இடம்பெற்றுள்ளது. மலைக்கு மேல் தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வழக்கறிஞர் வினய் பாண்டே என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "சடாக் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுளள கைலாஷ் மலை இந்துக்கள் புனிதமாக கருதுவது. அங்கு இறைவன் வசிப்பதாக அவர்கள் நம்பிக்கை. ஆனால் அந்த படத்தை போட்டு அதைவிட முக்கியத்தும் வாய்ந்ததுபோல காட்டும் வகையில் அதற்கு மேல் படத்தின் தயாரிப்பாளர் பெயரை போட்டுள்ளனர். இது கைலாஷ மலையையும், இந்துக்களையும் புண்படுத்தும் செயல்" என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சல்மான்கான், கரண் ஜோஹர் மீது வழக்கு ; நீதிமன்றம் தள்ளுபடிசல்மான்கான், கரண் ஜோஹர் மீது வழக்கு ; ... சுஷாந்த் சிங்கும், சுப்பலட்சுமி அம்மாவும் சுஷாந்த் சிங்கும், சுப்பலட்சுமி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in