Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொலைகாரர்களாக மாறிவிடாதீர்கள்: டிரால் செய்தவர்கள் பற்றி வனிதா வேதனைப் பதிவு

11 ஜூலை, 2020 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Vanithas-strong-message-who-trolled-her?

கடந்த இரண்டு வாரங்களாக சமூகவலைதளங்களில் ஹாட் டாபிக் வனிதா - பீட்டர் பால் திருமணம் தான். இருவரையும் வைத்து மீம்ஸ்கள், டிரால் வீடியோக்கள் உள்ளிட்டவைகளை பதிவிட்டு கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதனால் கோபமடைந்துள்ள வனிதா, கடும் கொந்தளிப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "என்ன நடந்தது என்றே தெரியாமல் என்னை குறிவைத்து தாக்கும் அனைவருக்கு இதை எழுதுகிறேன். நீங்கள் செய்வது சட்டத்துக்கு புறம்பானது, மனிததன்மையற்ற வகையில் துன்புறுத்தல், மற்றவர்களை காயப்படுத்தக் கூடிய கேவலமான மற்றும் அசிங்கமான கமெண்ட்டுகளை பதிவிடுகிறீர்கள்.

சைபர்புல்லியிங் (கொடுமைப்படுத்துதல்) என்பது விளையாட்டல்ல. அது ஒருவருடைய உயிரையே பறித்துவிடும். நீங்கள் செய்வதை எல்லாம் நான் தீவிரமாக எடுத்துக் கொண்டால் வெறுத்துப்போய் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகி என்னை நானே காயப்படுத்திக்கொள்ள நேரிடும். அது உங்களை எல்லாம் கொலைகாரர்களாக மாற்றிவிடும். யாருக்கும் இதை செய்வதற்கு முன் யோசியுங்கள்.

நீங்கள் செய்வது சரியல்ல. உண்மையில் நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சட்டம் என்னை சும்மாவிடாது. கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என நான் நம்புகிறேன். அவருக்கும், மனசாட்சிக்கும் தான் நான் பதில் சொல்வேன். நான் தெளிவாக இருக்கிறேன். உண்மையை தவிர வேறு எதுவும் பெரிதில்லை. இதை எழுதுவதால் நான் யார் என்பது தெரிவதைவிட நீங்கள் யார் என்பது எல்லோருக்கும் புரியும்", என வேதனைப்பட்டுள்ளார் வனிதா.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
எதிர்பார்ப்பில் நடிகைஎதிர்பார்ப்பில் நடிகை எனக்கு அந்த அனுபவம் இல்லை: ரீது வர்மா எனக்கு அந்த அனுபவம் இல்லை: ரீது வர்மா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

LAX - Trichy,இந்தியா
16 ஜூலை, 2020 - 18:15 Report Abuse
LAX Vanitha is Right.. வனிதாவைப்பற்றி கேவலமா கருத்து பதிவிடும் பலரும் சொந்த வாழ்க்கையில்.. மிக கேவலமான கயவர்களாகக்கூட இருப்பார்கள்.. ஆனா.. பெண் ஒருவர் தன் வாழ்க்கையை தன் இஷ்டம் போல அமைத்துக்கொள்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத (அ)யோக்கிய சிகாமணிகள் பலரும் தங்களை உத்தமபுத்திரர்களாக சித்தரிச்சுக்கிட்டு, வனிதாவைப் பற்றி, ஏக வசனத்தில் அளந்துவிடுகின்றனர்.. இல்லையென்றால் வனிதா. 'என் பெண் பிள்ளைகள் மீது காட்டும் அக்கறையை உங்கள் வீட்டுப் பெண்கள் மீது காட்டுங்கள்.. என் மகள்களின் நலன்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.." என்று வெளிப்படையாகவே.. (இன்று பெருமளவில் அதிகரித்துவரும், பெண்கள்/சிறுமிகள் இவர்களுக்கெதிராக நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட குடும்ப வன்முறைகளை சுட்டும் விதமாக), நம் சமூக அவலங்களை குறிப்பிட்டுச் சொல்லியும், அதையெல்லாம் உணராததுபோல்.. சும்மா.. வனிதாவையே சீண்டிக்கொண்டிருக்கத் தோன்றுமா..?
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
12 ஜூலை, 2020 - 11:58 Report Abuse
Natchimuthu Chithiraisamy பணம் கிடைத்து வெளிநாட்டிலிருந்து கிருத்துவ அமைப்புக்கு கொஞ்சம் உமக்கும் கிடைத்திருக்கலாம். இந்து பெயரை கெடுத்து பல முறை செய்தி தாள்களில் வரவழைத்து குடும்ப அமைப்பை கெடுத்து விட்டாய். திருமணம் தேவையா ? இதற்க்கு முன்பு உறவே இல்லையா இது மகளுக்கு தெரியாத ? இந்து பிரபலங்கள் கேவலமானாலும் இந்து அழியாது. கிருஸ்துவனால் சினிமா தொலைக்காட்சி செய்தியை மாற்றலாம் நாட்டை மாற்றமுடியாது இந்துக்கள் புரிய ஆரம்பித்து விட்டார்கள்
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
12 ஜூலை, 2020 - 11:34 Report Abuse
பெரிய ராசு பாவாடை-கல்யாணம்..வெட்கம் வேதனை அவமானம் அசிங்கம் குற்றம் ஜெயில் ..கதை சுருக்கம் அவளவுதான்
Rate this:
Thulasi Arasu - THANJAVUR,இந்தியா
12 ஜூலை, 2020 - 09:12 Report Abuse
Thulasi Arasu , தமிழ் மண்ணிற்கு தான் அவமானம்...
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
12 ஜூலை, 2020 - 08:45 Report Abuse
Bala Murugan அதான் எல்லாத்தயும் செய்துட்டியே நீ செய்தது இரண்டாம் திருமணம் என்ற துரோகம்....
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in