Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் ஹீரோவே இல்லை - யோகி பாபு கோபம்

11 ஜூலை, 2020 - 13:30 IST
எழுத்தின் அளவு:
I-am-not-hero-:-yogibabu-angry

சினிமாவில் ஒருவர் பிரபலமாகி விட்டால் போதும் அவருக்கான முக்கியத்துவம் திடீரென அதிகமாகிவிடும். அப்படி ஒரு பிரபலத்தை அடைய நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு அறிமுகமாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைத்துள்ளது.

அவர் நாயகனாக நடித்து கடந்த வருடம் ஒரு சில படங்கள் வெளிவந்தன. அதே சமயம் அவர் நகைச்சுவை நடிகராகவும் பல சிறிய படங்களில் நடித்து முடித்துள்ளார். யோகி பாபுவுக்கு தற்போது மவுசு அதிகரித்துவிட்டதைத் தொடர்ந்து அவர் காமெடி நடிகராக நடித்த படங்களைக் கூட அவர் ஹீரோவாக நடித்துள்ளது போல விளம்பரப்படுத்தி வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

நேற்று ஓடிடி தளத்தில் வெளியான 'காக்டெய்ல்' படத்தில் கூட யோகி பாபு கதாநாயகன் அல்ல, அவர் ஒரு நகைச்சுவை நடிகர்தான். படத்தின் நாயகனாக 'எங்கேயும் எப்போதும்' படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும், 'எங்க காட்டுல மழை' படத்தில் நாயகனாக நடித்த மிதுன் தான் நடித்துள்ளார். ஆனால், வியாபாரம் செய்வதற்காக யோகிபாபுவை கதாநாயகன் போல சித்தரித்து விளம்பரப்படுத்தி உள்ளார்கள்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்திற்காக யோகி பாபு வெளியிட்ட ஒரு வீடியோவில் கூட தான் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராகத்தான் நடித்துள்ளேன், படத்தின் நாயகன் மிதுன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தப் படத்திற்காக விளம்பரங்களை வெளியிட்ட நாளிலிருந்தே யோகி பாபுவுக்குத்தான் தயாரிப்பாளர் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். படத்தின் நாயகன் மிதுன் அதிகம் இடம் பெறவில்லை. இந்நிலையில் படம் நேற்று வெளியாகி மோசமான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. நேற்று பத்திரிகையாளர்களை யோகி பாபு ஜும் வழியே சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்த நிலையில் அதை ரத்து செய்துவிட்டார்கள்.

படத்திற்கு வந்த விமர்சனங்களால்தான் யோகி பாபு 'நான் ஹீரோவோக நடிக்காத படத்திற்கு எதற்கு பேட்டி தர வேண்டும்,” என சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி - ஏமாற்றம் தந்த மற்றுமொரு வெளியீடுஓடிடி - ஏமாற்றம் தந்த மற்றுமொரு ... 'ராதே ஷ்யாம்' - மீண்டும் 'காப்பி' சர்ச்சையில் பிரபாஸ் போஸ்டர் 'ராதே ஷ்யாம்' - மீண்டும் 'காப்பி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in