பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் | குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி | 'மாஸ்டர்' - ஹிந்தியில் படுதோல்வியா ? |
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தினக்கூலிகளாக வேலை செய்து வந்தனர். கொரோனா பிரச்சினை முடிவுக்கு வராததால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை நடிகை வரலட்சுமி வழங்கினார்.
சேவ் சக்தி பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.