Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி

10 ஜூலை, 2020 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Actor-Ponnambalam-hospitalised

வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் கமல் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை டூ பேங்காங் என்பது அவர் கடைசியாக நடித்த படம். அடிப்படையில் சண்டை கலைஞரான அவர் வடசென்னையை சேர்ந்தவர். விஜய் டி.வியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக அவர் சொந்தமாக ஒரு படம் தயாரித்து இயக்கியதில் பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது. தற்போது பொன்னம்பலத்தின் மருத்துவ செலவையும், அவரது 2 குழந்தைகளின் படிப்பு செலவையும் கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா?ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை ... புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

தல புராணம் - மதுரை,இந்தியா
11 ஜூலை, 2020 - 21:38 Report Abuse
தல புராணம் மன உறுதியுடன் இருங்கள். நிச்சயம் உடல்நலம் தேறும்.
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
11 ஜூலை, 2020 - 21:37 Report Abuse
தாமரை செல்வன்-பழநி திரு பொன்னம்பலம் படத்தில்தான் வில்லன். உண்மையில் நம்பியாரைப்போல நிஜத்தில் மிகவும் நல்லவர். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
11 ஜூலை, 2020 - 18:20 Report Abuse
S. Narayanan பொன்னம்பலம் நல்ல மனிதர். மீண்டு வர வாழ்த்துக்கள்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
11 ஜூலை, 2020 - 14:44 Report Abuse
கல்யாணராமன் சு. ஒரு சகோதர கலைஞருக்கு தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள்... ஒன்று புரியவில்லை ..... ஏன் எல்லா திரைக்கலைஞர்களும், சம்பாதித்த காசை குடும்பத்திற்கு சேமித்து வைக்காமல் படம் எடுக்கிறேன் என்று சென்று நஷ்டத்தை தேடிக்கொள்கிறார்கள் ????
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
11 ஜூலை, 2020 - 09:04 Report Abuse
பெரிய ராசு மிக அருமையான நேர்மையான மனிதர் ..ஆண்டவன் அருளட்டும்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in