பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தமிழ் சினிமாவில் வாரிசுகள் அறிமுகமாவது ஒன்றும் புதிய விசயமில்லை. ஏற்கனவே கார்த்திக், பிரபு தொடங்கி தற்போது அவர்களின் மகன்கள் என மூன்றாவது தலைமுறையாக பலர் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். நடிப்பு பின்புலம் இல்லாமல் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்களும் கூட தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகன் ஆகி விட்டார். அவரைத் தொடர்ந்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யும் நடிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல், கனடாவில் திரைத்துறை சம்பந்தப்பட்ட படிப்பு படித்து வரும் ஜேசன் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனால், மாஸ்டர் படத் தயாரிப்பாளர் பிரிட்டோவின் புதிய படத்தில் சஞ்சய் ஹீரோவாகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு பட வேலைகள் ஆரம்பமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி உண்மையில்லை என பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
'அப்படி எந்த ஒரு பேச்சும் இதுவரை நாங்கள் பேசவில்லை. விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்து வருகிறார். அவருக்கு இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசை. படித்து முடித்து வந்த பிறகு ஹீரோவாக ஆவாரா? இயக்குனர் ஆவாரா? என்பது அவருக்கு தான் தெரியும். இதுநாள் வரை நானும் விஜய்யும் கூட இதைப் பற்றி பேசியது இல்லை' என பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
அதோடு, விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஓடிடி-யில் வெளியாக இல்லை என்றும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் தியேட்டர் திறந்த பிறகு தான் அந்த படம் ரிலீசாகும்' எனவும் பிரிட்டோ உறுதியாக கூறியுள்ளார்.