பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
கொரோனா ஊரடங்கில் சிலர் எங்கிருக்கிறார்கள் என்ற இடமே தெரியவில்லை. சிலர் தினமும் சமூக வலைத்தளங்களில் எதையாவது பதிவிட்டு தங்கள் இருப்பைத் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த கொரோனா ஊரடங்கில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த குறும்படமான 'கார்த்திக் டயல் செய்த எண்' ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது யு டியுபில் வெளியான பிறகு ஒரு பக்கம் வரவேற்பையும் பெற்றது. இன்னொரு பக்கம் 'கள்ளக் காதல் கதை' என கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.
கடந்த ஐந்து வாரங்களாக சமூக வலைத்தளங்கள் பக்கம் எட்டிப் பார்க்காத த்ரிஷா நேற்று திடீரென ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். கொஞ்சம் கிளாமரான புகைப்படம் தான் என்றாலும், அவர் மீண்டும் சமூக வலைத்தளம் பக்கம் வந்ததற்கு சில பிரபலங்களும், ரசிகர்களும் லைக் செய்துள்ளனர்.
த்ரிஷா நடித்து முடித்துள்ள சில படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளன. 'சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, பரமபத விளையாட்டு' ஆகிய படங்கள் முடிந்தும் வெளியாகாமல் முடங்கி உள்ளது. 'ராங்கி' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. 'பொன்னியின் செல்வன்' படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பும் தள்ளிப் போய்விட்டது.