மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா, அதை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தை இயக்கி முடித்து ரிலீஸுக்கு தயார் நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். கொரோனால் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. இதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் முன்னணி நடிகர்களை வைத்து தயாரிக்கவுள்ள ஆந்தாலாஜி வகை படத்தில் இவரும் ஒரு இயக்குனராக இணைந்துள்ளார். கொஞ்சம் நீளமான சில குறும்படங்களின் இணைப்பாக இந்தப்படம் உருவாக இருக்கிறது.
கருணைக்கொலையை பின்னணியாக வைத்து உருவாகும் இந்தப்படத்தில் கவுதம் மேனன், வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரும் குறும்படங்களை இயக்கவுள்ளனர். இதில் சுதா கொங்கரா இயக்கவுள்ள குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த குறும்படத்திற்கு இசையமைக்கிறார். ஒருபக்க கதை, மீன்குழம்பும் மண்பானையும் படத்திற்கு காளிதாஸ் நடிக்கும் மூன்றாவது தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.