பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பிரபலமானவர் பப்லு என அழைக்கப்படும் பிரித்விராஜ். இவர் அவள் வருவாளா படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார். கடந்தாண்டு அஜித் மற்றும் சூர்யா குறித்த அவரது கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பின.
இந்நிலையில் அஜித் ஒரு நேர்மையான மனிதர் என்பதைப் புரிந்து கொண்டதாகவும், தனக்காக தனது மனைவியை அஜித் கடிந்து கொண்டார் எனவும் பப்லு தெரிவித்துள்ளார்.
அதன் விபரமாவது,
லாக்டவுனுக்கு முன்பாக உணவகம் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றுள்ளார் பப்லு. அங்கு தனது மகளுடன் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியும் சாப்பிட வந்துள்ளார். ஷாலினியும், பப்லுவும் எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை என்பதால் இருவரும் நேரில் பார்த்தும் பேசாமல் தயக்கத்துடன் இருந்துள்ளனர். மூன்று முறை இதே போல் அந்த உணவகத்தில் அவர்கள் நேரில் பார்த்தும் பேசிக் கொள்ளவில்லை.
சமீபத்தில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மானேஜர் பப்லுவுக்கு போன் செய்து ஷாலினி உங்கள் செல்போன் எண்ணைக் கேட்கிறார். தரட்டுமா? எனக் கேட்டுள்ளார். தாராளமாக கொடுங்கள் என்று பப்லு கூறியுள்ளார்.
அதன் பிறகு பப்லுவுக்கு போன் செய்த ஷாலினி, “சாரி, நான் உங்களுடன் சேர்ந்து படத்தில் நடித்தது இல்லை. அதனால் உங்களை ஹோட்டலில் பார்த்தபோது நான் பேசவில்லை. நான் உங்களை பார்த்தும் பேசாமல் போனதை அஜித்திடம் கூறினேன். அதற்கு அஜித்தோ, ப்ரித்விராஜ் ஒரு சீனியர் நடிகர், என் நண்பர், பள்ளியில் என் சீனியர். அவரை பார்த்தால் பேசியிருந்திருக்க வேண்டும் என்று கூறி கோபப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போன பப்லு, 'அஜித் தன் மனைவியிடம் அப்படி கூறியிருந்திருக்க வேண்டியது இல்லை. இது அவரின் வளர்ப்பைக் காட்டுகிறது. அஜித் ஒரு பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்' எனப் பாராட்டியுள்ளார்.