நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
நடிகர் வடிவேலு கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியனான மெர்சல் படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படமும் டிராப் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கடந்த மூன்று வருடங்களாக புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஆனாலும், அவர் மீண்டும் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
முதலில் அஜித்துடன் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து கமலின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்பட்டது. இதில், அஜித் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாத நிலையில், தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு இருப்பது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மருதமலை படத்தில் ஏட்டு ஏகாம்பரம் என வடிவேலுவின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத கதாபாத்திரம் கொடுத்த சூரஜ் தான் இந்தப் புதிய படத்தை இயக்குவதாகக் கூறப்படுகிறது.
இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனாலும், இந்தத் தகவலால் வடிவேலு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.