Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிர்ரு இறந்து ஒரு மாதம்... கர்ப்பிணி மேக்னா ராஜ் உருக்கமான பதிவு!

08 ஜூலை, 2020 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Meghna-raj-about-Chiranjeevi-Sarjas-one-month-condolence-meet

நடிகர் அர்ஜூனின் மருமகனும்(உறவு முறை), கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த மாதம் 7ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 39 வயதில் அவரது இந்த திடீர் மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிரஞ்சீவி இறந்த போது அவரது மனைவியான நடிகை மேக்னாராஜ் நான்கு மாத கர்ப்பமாக இருந்தார். பத்து ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டனர். இதனால் சார்ஜாவின் இந்த திடீர் மரணத்தால் மேக்னா உடைந்து போய் விட்டார்.

இந்த சூழ்நிலையில் சார்ஜா இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து தன் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றை மேக்னாராஜ் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மேக்னா, கூடவே உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், 'என் டியரஸ்ட் சிர்ரு... சிர்ரு என்றாலே எப்போதுமே கொண்டாட்டம் தான். சிர்ருவால் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்கு கொடுத்தது தான் விலைமதிப்பில்லாதது. என் குடும்பம்... நாங்கள்... ஒவ்வொரு நாளும் நீங்கள் விரும்பியது போன்று குழந்தைக்காக காத்திருக்கிறோம். அன்பு, சிரிப்பு, சேட்டைகள், நேர்மை மற்றும் மிக முக்கியமாக ஒன்றிணைத்தல். வீ லவ் யூ பேபி மா” என உருக்கமாக மேக்னா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்தை சேர்த்து வைத்த ஊரடங்கு : வைரலாகும் குறும்படம்குடும்பத்தை சேர்த்து வைத்த ஊரடங்கு : ... பிக்பாஸ் 4ல் கலந்து கொள்கிறேனா.. ரம்யா பாண்டியன் விளக்கம் பிக்பாஸ் 4ல் கலந்து கொள்கிறேனா.. ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
09 ஜூலை, 2020 - 18:54 Report Abuse
Tamilachi கடவுள் உனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம் அம்மா...
Rate this:
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஜூலை, 2020 - 12:01 Report Abuse
Syed Mustafa கடவுள் உங்களுக்கு மன தைரியத்தையும் , உங்கள் குழந்தைக்கு நல்ல எதிர் காலத்தையும் கொடுக்கட்டும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09 ஜூலை, 2020 - 11:46 Report Abuse
skv srinivasankrishnaveni நல்லபடியாக பெற்று நலமுடன் வாழவேண்டும் தாயும் சேயும் உன்கணவரின் ஆசிகளும் கிடைக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in