பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி | விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் | ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு ஆளான சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.. இதில் தொடர்புடையதாக கைது செய்ப்பட்ட நடிகர் திலீப்புக்கு மலையாள நடிகர் சங்கம் ஆதரவு காட்டுவதாக கூறி பார்வதி, ரம்யா நம்பீசன், ரேவதி உள்ளிட்ட நடிகைகள் சிலர் நடிகர் சங்கத்திலிருந்து விலகினார்கள். இவர்களுடன் அஞ்சலி மேனன் உட்பட சில பெண் இயக்குனர்களும் ஒன்றாக சேர்ந்து சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றையும் துவங்கினார்கள்..
இது தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன் தினம் விது வின்சென்ட் என்கிற பெண் இயக்குனர் இந்த அமைப்பிலிருந்து விலகியதோடு, அந்த அமைப்பில் பெண்களுக்குள்ளேயே பாரபட்சம் காட்டப்படுகிறது என குற்றம் சாட்டினார்.. இந்தநிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஸ்டெபி சேவியர் என்பவரும் இந்த அமைப்பு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த அமைப்பில் உள்ள ஒரு பெண் இயக்குனரின் படத்தில் எந்த ஒப்பந்தமும் போடாமல் நம்பிக்கையின் அடிப்படையில் வேலை பார்த்தேன்.. முதல் ஷெட்யூல் முடிந்ததும் சம்பளம் பற்றி கேட்டபோது தான் அவரது உண்மையான முகம் தெரிந்தது.. நீ பிறக்கும்போதே சினிமாவில் இருந்தவள் நான் என கூறிய அவர், என்னை படத்தில் இருந்து நீக்கியதுடன் என் அனுமதி பெறாமலேயே என்னுடைய உதவியாளரை வைத்து படப்பிடிப்பை நடத்தினார். டைட்டில் கார்டிலும் என் பெயர் இடம்பெறவில்லை. இந்த அமைப்பில் உள்ள பெண்களே பெண்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றனர்” என தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் ஸ்டெபி சேவியர். அவர் குறிப்பிட்டது பெங்களூர் டேய்ஸ் புகழ இயக்குனர் அஞ்சலி மேனனைத்தான் என்கிற பரபரப்பும் கூட ஏற்பட்டுள்ளது.