பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
காந்தக் குரலோன் கே.ஜே.யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். முறைப்படி கர்நாட சங்கீதமும், மேற்கத்திய சங்கீதமும் படித்த இவர், 2000மாவது ஆண்டு மில்லினியம் ஸ்டார் என்ற மலையாளப் படத்தில் வித்யாசாகர் இசையில் பாடகராக அறிமுகம் ஆனார். தென்னிந்திய மொழிகளில் 300 பாடல்கள் வரை பாடியுள்ள விஜய் யேசுதாஸ் மாநில அரசு விருதுகள் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
நடிப்பில் ஆர்வமுடன் இருந்த விஜய் யேசுதாஸ், அவன் என்ற மலையாளப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு மாரி படத்தில் வில்லனாக தமிழில் அறிமுகமானார். படைவீரன் படத்தில் ஹீரோ ஆனார். தற்போது சாலமன் என்ற 3டி படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகிறது.
தனது 20 வருட பயணம் குறித்து விஜய் யேசுதாஸ் கூறியதாவது: நான் ஒரு பின்னணி பாடகராகி 20 ஆண்டுகள் ஆகின்றன. காலம் இவ்வளவு விரைவாக செல்லும் என்று நான் உணரவில்லை. பல ஆண்டுகளாக, அற்புதமான பாடல்களைப் பாட முடிந்தது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பார்வையாளர்களும் அந்த பாடல்களைக் கேட்டு நேசித்தார்கள். ஒருவர் எத்தனை பாடல்களை பாடுகிறார் என்பது முக்கியமல்ல, அது மக்களின் இதயங்களில் எதிரொலிக்கிறதா என்பதே முக்கியம். அந்த வகையில் நான் பாக்கியசாலி.
எனது வளர்ச்சி மெதுவானது. ஒரு ஹிட் பாடலைப் பெற பெரிய காத்திருப்பு இருந்தது. நான் ஒருபோதும் என் தந்தையை நம்பியிருக்கவில்லை. நான் என் சொந்த வழியில் சென்று ஒரு பாதையை உருவாக்கினேன் . அந்த பாதையில் 20 ஆண்டுகளாக பயணித்ததில் மகிழ்ச்சி. என்கிறார்.