எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் | மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் |
ஊரடங்கு காலத்திற்கு முன்பு பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் ரன். இந்த தொடரில் கிருஷ்ணா, சாயாசிங் நாயகன், நாயகியாக நடித்து வருகிறார்கள். இதே தொடரில் வில்லனாக நடிப்பவர் விஜித் ருத்ரன். கடந்த ஆண்டு ஒளிபரப்பை தொடங்கிய இந்த தொடரில் 197 எபிசோட்கள் ஒளிபரப்பான நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த இடைவெளியில் வில்லன் விஜித் ருத்ரன், சொந்த ஊரான திண்டுக்கல்லில் உள்ள கோவிலில் எளிமையான முறையில் தனது திருமணத்தை முடித்துள்ளார். மணமகள் விஷ்வ வினோதினி. இப்போது திருமண போட்டோக்களை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். விஜித்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.