Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்

08 ஜூலை, 2020 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-Singh-also-cut-her-pay-50-percent

டில்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி பொண்ணு ரகுல் ப்ரீத்தி சிங். கில்லி என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்து விட்டு யுவன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே படங்களில் நடித்தார்.

தமிழில் குறைவான படங்களில் நடித்தபோதும், தெலுங்கில் பிசியான நடிகை. தற்போது இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், கமல் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 மாதத்திற்கும் மேலாக சினிமா உலகம் முடங்கிக் கிடக்கிறது. முன்னணி நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைத்தால் மட்டுமே சினிமா மீண்டு வர முடியும் என்ற கருத்து பரவி வருகிறது. நடிகை டாப்ஸியும், கீர்த்தி சுரேசும் சம்பள குறைப்பை ஏற்கெனவே அறிவித்து விட்டார்கள். இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத்தி சிங்கும் இனி நடிக்கும் படங்களில் சம்பளத்தை 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை குறைத்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

தனது உதவியாளர்கள், மானேஜர்கள் மூலம் இந்த தகவலை அவர் தயாரிப்பாளர்களுக்கு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ரகுல் ப்ரீத்தி சிங் தற்போது இந்தி படங்களுக்கு 2 கோடியும், தெலுங்கு படங்களுக்கு ஒன்றரை கோடியும், தமிழ் படங்களுக்கு ஒரு கோடியும் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: ... 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 ஜூலை, 2020 - 16:41 Report Abuse
Kamal இருபது லக்ஷம் ஓகே என்றால் நான் படம் எடுக்க தயார். ஓகே யா. படம் நல்ல வெற்றி பெற்றால் பின் பத்து லக்ஷம் அதிகம் தருவேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in