Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு

08 ஜூலை, 2020 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-to-cut-50-percent-salary

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்ட்ட ஊரடங்கால் கடந்த 3 மாதத்திற்கு மேலாக தியேட்டர்கள் இயங்கவில்லை. படப்பிடிப்பு நடக்கவில்லை. லைட்பாய் முதல் சூப்பர் ஸ்டார் வரை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். திரைப்படங்கள் தியேட்டர்களை விட்டு ஓடிடி தளத்திற்கு விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்றால் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்து வேகமாக பரவி வருகிறது. தமிழில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், உதயா, இயக்குனர்கள் ஹரி, அஜய்ஞானமுத்து ஆகியோர் தாமாக முன்வந்து சம்பள குறைப்பை அறிவித்துள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேசும், ரகுல் ப்ரீத்தி சிங்கும் சம்பள குறைப்பு அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டது. மலையாள நடிகர்கள் சங்கம், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்திய 50 சதவிகித சம்பளத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தை 50 சதவிகிதம் வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பில் இல்லை. அரசால் நிர்ணயிக்கப்பட்ட தனி அதிகாரிதான் நிர்வகித்து வருகிறார். அவராலோ, அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆலோசனை குழுவாலோ புதிய திட்டம் எதையும் அறிவித்து நடைமுறைபடுத்த முடியாது.

என்றாலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வெளியே முன்னணி தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து இந்த கருத்தை முன் வைத்து நடிகர் சங்கத்தை கேட்டுக் கொள்ளப் போவதாக தெரிகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை குழுவை சேர்ந்த ஜே.சதீஷ் குமார் தனது டுவிட்டரில் "நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தங்கள் சம்பளத்தை 50 சதவிகிதமாக குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் என்னோடு பேசியிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையோடு இருந்து இதனை செய்து முடிப்பார்கள்" என்று கூறியுள்ளர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான்பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா ... வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

A.Gomathinayagam - chennai,இந்தியா
08 ஜூலை, 2020 - 14:35 Report Abuse
A.Gomathinayagam ஐம்பது விழுக்காடு ,திரைப்பட கட்டணங்களையும் குறைக்கவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in