Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஒரு கைதியின் டைரி

08 ஜூலை, 2020 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Oru-Kaidhiyin-Dairy

படம்: ஒரு கைதியின் டைரி
வெளியான ஆண்டு : 1985
நடிகர்கள் : கமல்ஹாசன், ரேவதி, ராதா, மலேஷியா வாசுதேவன்
இயக்கம் : பாரதிராஜா
தயாரிப்பு : சந்திரலீலா

பாரதிராஜா இயக்கத்தில், கமல் நடிப்பில், 'டாப் டக்கர்' படம் உருவாகத் துவங்கியது. அது, சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கதை போல இருப்பதால், படக்குழு செய்வதறியாமல் தவித்தது. அப்போது, கே.பாக்யராஜ் கைகொடுத்தார். பாரதிராஜாவின் குருகுலத்தில் இருந்து பிரிந்து சென்ற பாக்யராஜ், ஆறு ஆண்டுகளுக்கு பின், தன் குருநாதருக்காக, கதை எழுதிக் கொடுத்த படம் தான், ஒரு கைதியின் டைரி.

மனைவியின் மரணத்திற்கு காரணமானோரை, சிறையில் இருந்து வெளியே வந்து வேட்டையாடும் கணவன். அவரை பிடிக்க பொறி வைத்திருக்கும், காவல் அதிகாரியாக இருக்கும், மகன். இது படத்தின் ஒன் லைன். சுவாரஸ்யமான கதை முடிச்சுக்கு, திரைக்கதையில் திருப்பங்கள் கொடுத்து, இயக்கியிருந்தார் பாரதிராஜா.

தந்தை, மகன் என, இரட்டை வேடத்தில் நடித்திருந்தார், கமல். பாடகர், மலேஷியா வாசுதேவன், இப்படத்தின் வழியாக, வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இளையராஜாவின் இசையில், 'ஏபிசி நீ வாசி, பொன்மானே...' போன்ற பாடல்கள், பிரபலமடைந்தன.

இப்படம், பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, ஹிந்தியில், அமிதாப் பச்சன், ஜெயபிரதா, ஸ்ரீதேவி நடிப்பில், ஆக்ரி ராஸ்தா எனும் பெயரில், கே.பாக்யராஜ் இயக்கினார். க்ளைமேக்ஸ் மட்டும், மாற்றி அமைத்தார். படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ஒரு கைதியின் டைரி படம், தெலுங்கில், கைதி வீட்டா என, மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. அதன்பின், கிருஷ்ணம் ராஜு நடிப்பில், மரண கோமம் எனும் பெயரில், 'ரீமேக்' செய்யப்பட்டது. ஒரு கைதியின் டைரியில் இருந்த, பழிக்கு பழி வாங்கும் எளிய கதையில், தான் கற்ற வித்தையை காட்டியிருந்தனர், கே.பாக்யராஜும், பாரதிராஜாவும்!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - ஆண்பாவம்மறக்க முடியுமா? - ஆண்பாவம் மறக்க முடியுமா? -  முதல் மரியாதை மறக்க முடியுமா? - முதல் மரியாதை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 ஜூலை, 2020 - 13:02 Report Abuse
Kamal சூப்பர் படம். மறக்க முடியாத படம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in