Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு

08 ஜூலை, 2020 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-celebrities-decides-to-meet-CM

கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை, தியேட்டர்களும் திறக்கப்படவில்லை, டிவி தொடர் படப்பிடிப்புகளை மட்டும் நடத்திக் கொள்ள கடந்த மாதத் துவக்கத்தில் அரசு அனுமதி அளித்து அவை நடைபெற ஆரம்பித்தது. ஆனால், கடந்த மாதக் கடைசியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 15 நாட்களாக டிவி தொடர் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. அவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளன.

இதனிடையே, சினிமா தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோர் ஆன்லைன் மூலமாக ஒரு ஆலோசனையை நடத்தியுள்ளார்கள். அதன்படி தங்கள் சார்பாக முதல்வரை சந்தித்து சில கோரிக்கைகளை வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

சினிமா தியேட்டர்களைத் திறக்கவும், சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்கவும் கோரிக்கை வைக்கப் போகிறார்களாம். சில சீனியர்கள் மட்டும் ஒரு குழுவாக முதல்வரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தியேட்டர்கள் திறக்க இன்னும் தாமதமானால் அது சினிமா தயாரிப்புகளையும் பாதிக்கும். ஏற்கெனவே ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்கள் கொரானோ தொற்று முற்றிலுமாக அழியும் வரை படப்பிடிப்புக்கு வரமாட்டோம் என சொன்னதாகச் செய்திகள் வந்துள்ளன.

மேலும், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் தற்போது வாங்கும் சம்பளத்தில் 50 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள அவர்களை நிர்பந்தப்படுத்த வேண்டும் என பேசியுள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் சில நாட்களில் திரையுலகினரின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஏதாவது அறிவிப்பு வரலாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமிமீண்டும் பள்ளிக்கு சென்று வந்த ... பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
09 ஜூலை, 2020 - 05:36 Report Abuse
Mani . V கட்டாயம் சந்தியுங்கள். உங்களுக்கு நல்ல பதிலே கிடைக்கும். சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கையே ஊரடங்கு சமயத்தில் திறந்தவர். சமூகத்தை குட்டிசுவராக்கும் உங்களுக்கு கட்டாயம் உதவி செய்வார் (யார் எக்கேடு கெட்டால் நமெக்கென்ன? நீ ரசத்தை ஊற்று)
Rate this:
unmaitamil - seoul,தென் கொரியா
09 ஜூலை, 2020 - 01:07 Report Abuse
unmaitamil தமிழ்நாட்டு மக்களை "காரோண சீன வைரஸ்" மரணத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால், முதல்வர் அவர்களே, அடுத்த 2021, ஜூலை மாதம்வரை தயவு செய்து திரை அரங்குகளை திறக்காதீர்கள். குளிர் சாதன வசதி இல்லாமல் திரைஅரங்கை நடத்த முடியாது. இது மிக மிக அபாயமான முடிவாகும். திரை அரங்கில் இருந்து கொண்டுவரும் தொற்று முழு குடும்பத்தையும் பாதிப்புள்ளாக்கும். வேண்டாம் இந்த விஷ பரீட்சை. சினிமா படம் திரை இடாவிட்டால் நாட்டில் குறை ஒன்றும் வந்து விடாது. மக்களுக்கும், மாணவர்களுக்கும், இளைய சமுதாயத்திற்கும் நன்மையே.
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
08 ஜூலை, 2020 - 13:52 Report Abuse
vbs manian நிழல் உலக ஹீரோக்கள் நிஜ உலக ஹீரோக்கள் ஆவார்களா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in