Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி

07 ஜூலை, 2020 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Gautham-menon-corona-documentary

கொரோனா ஊரடங்கிலும் பிஸியாக பட வேலைகளில் இயங்கிக் கொண்டிருப்பவர்களில் கவுதம் மேனனும் ஒருவர். வீட்டை விட்டே வெளியேற முடியாத ஊரடங்கிலும், சிம்பு, த்ரிஷா நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஒரு சான்ஸ் கொடு என்ற மியூசிக் வீடியோவை உருவாக்கினார். இதிலும் மேகா ஆகாஷ், கலையரசன் மற்றும் சாந்தனு என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இது ஒருபுறம் இருக்க, விக்ரமை வைத்து கவுதம் இயக்கிய துருவ நட்சத்திரமும், வருண் நடிப்பில் ஜோசுவா இமை போல் காக்கா படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கவுதமின் அடுத்த படைப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து டிஸ்கவரி சேனலுக்காக டாக்குமெண்டரி ஒன்றை உருவாக்குகிறார். “கோவிட் 19: வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போர்” என்ற தலைப்பில் இந்த டாக்குமெண்டரி உருவாகிறது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும், அதில் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் அனுபவங்களையும் இந்த டாக்குமெண்டரி பேச இருகிறது.

இந்த டாக்குமெண்டரியை தமிழில் கவுதம் மேனனும், இந்தியில் மனோஜ் பாஜ்பாயும் வர்ணனை செய்கிறார்கள். ஜூலை 16 அன்று இரவு 8 மணிக்கு டிஸ்கவரி பிளஸ் மற்றும் ஜூலை 20 அன்று டிஸ்கவரி சேனலில் இந்த டாக்குமெண்டரி ஒளிபரப்பப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை சுமலதாவுக்கு கொரோனா!நடிகை சுமலதாவுக்கு கொரோனா! "கருப்பன்" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து "கருப்பன்" நடந்து போனா ஊரே அடங்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in