'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
களத்தில் இறங்கி வேலை செய்து வரும் மக்கள் பிரதிநிகள் பலரும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மண்டியா தொகுதி எம்.பி.யும், நடிகையுமான சுமலதாவும் ஒருவர்.
மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியான சுமலதா, 80களில் தமிழிலும் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் சுமலதா.
தனது தற்போதைய நிலை பற்றி சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். அதில், “கடந்த 4-ந் தேதி எனக்கு லேசான தலைவலி மற்றும் தொண்டை வலி இருந்தது. நான் தொடர்ந்து எனது தொகுதியில் தொடர்ந்து மக்களை சந்தித்து வந்தேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நடமாடினேன். இதனால் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதன் முடிவு இன்று (அதாவது நேற்று) வந்தது. அதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். நோய் எதிர்ப்பு சக்தி எனக்கு சற்று அதிகமாகவே உள்ளது. மேலும் உங்களின் ஆசிர்வாதம் என் மீது இருக்கிறது. அதனால் நான் வேகமாக குணம் அடைகிறேன்.
மேலும் என்னை சந்தித்த நபர்களின் விவரங்களை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். என்னை சந்தித்தவர்களில் யாருக்காவது அறிகுறி இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என சுமலதா தெரிவித்துள்ளார்.