பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
முன்னெப்போதையும் விட தற்போது தெலுங்கு திரையுலகினர் மலையாள படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் கிட்டத்தட்ட ஆறு மலையாள படங்கள் தெலுங்கில் ரீமேக்காவதற்கு தயாராகி வருகின்றன. அதில் ஒன்று தான் மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடித்த லூசிபர்.. இந்தப்படத்தை தனது தந்தை சிரஞ்சீவியை வைத்து தயாரிக்க இருக்கிறார் நடிகர் ராம்சரண்.
பிரபாஸ் நடித்த சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் சுகாசினி நடிக்க உள்ளார் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. பின் குஷ்பு நடிப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் தற்போது அந்தப்படத்தில் மஞ்சு வாரியரின் தம்பியாக டொவினோ தாமஸ் நடித்திருந்த இளம் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் ராம்சரண்.