Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்

07 ஜூலை, 2020 - 13:29 IST
எழுத்தின் அளவு:
Two-type-of-news-about-Lokesh-Kanagaraj-film

'மாநகரம், கைதி' படங்களின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ள படம் 'மாஸ்டர்'. விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறது.

இந்தப் படத்தையடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், லோகேஷ் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கவில்லை என்றார்கள். அதன்பின் அவர் வேறு கதையைச் சொல்லி ரஜினி ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல் வந்தது.

இதனிடையே, ரஜினிகாந்த் தரப்பில் கேட்கப்பட்ட சம்பளத்தைப் பற்றி கமல்ஹாசன் யோசிப்பதாகச் சொன்னார்கள். மேலும் ஒரு கூடுதல் தகவலாக ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கொரானோ பாதிப்பு காரணமாக தள்ளிப் போய்விட்டது. எனவே, அந்தப் படம் முடியும் வரை கமல் காத்திருக்க விரும்பவில்லை என்றும் ரஜினிக்குப் பதிலாக அவரே நடிக்க முடிவு செய்துவிட்டார் என்றும் புதிய தகவல் ஒன்று தற்போது வந்துள்ளது.

அடிக்கடி இந்தப் படத்தைப் பற்றி தகவல்கள் மாறி, மாறி வந்து கொண்டிருக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் அமையுமா ?விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் ... ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
09 ஜூலை, 2020 - 11:59 Report Abuse
RaajaRaja Cholan ரஜினி கதையில் கமல் கண்டிப்பாக ஓடாது , ரரஜினி கதை ரஜினிக்கு மட்டுமே . அது ரஜினி மாஜிக்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in