Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் அமையுமா ?

07 ஜூலை, 2020 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Did-Vijay---Yuvan-combo-will-back?

தமிழ் சினிமாவில் இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் அதிகமான ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் யுவன்ஷங்கர் ராஜா. மற்ற இளம் இசையமைப்பாளர்களுக்கு முன்பாகவே அறிமுகமானவர். ஆனால், அவருக்குப் பின் வந்த சில இசையமைப்பாளர்கள் கூட கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோருடன் சில படங்களுக்கு இசையமைத்துவிட்டனர்.

ஆனால், யுவன்ஷங்கர் ராஜா இன்னமும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கவில்லை. மேலும், விஜய் நடித்து 2003ல் வெளிவந்த 'புதிய கீதை' படத்திற்குப் பிறகு கடந்த 17 வருடங்களாக அவர் நடிக்கும் எந்த படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. இத்தனைக்கும் 'புதிய கீதை' படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அப்போது ஹிட் பாடல்களாகவே அமைந்தன.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு தமன் இசையமைக்கப் போகிறார். சமீபத்தில் ரசிகர்களுடன் சாட்டிங் செய்யும் போது கூட விஜய் தன்னை அதிகம் ஈர்த்தவர், அவர் படங்களுக்கு இசையமைக்கத் தயாராகவே உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

அஜித் - யுவன் கூட்டணி என்றாலே அஜித் ரசிகர்கள் ஆவலாய் இருப்பார்கள். அதுபோல விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் எப்போது அமையும் என யுவன் ரசிகர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த ஆபாச அதிரடியை ஆரம்பித்த ராம்கோபால் வர்மாஅடுத்த ஆபாச அதிரடியை ஆரம்பித்த ... லோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள் லோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in