விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
பீக்கில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடும் நடிகைகள் ஒருசிலர் மட்டுமே.. மார்க்கெட் இருக்கும் வரை தான் நடித்து பணம் பார்க்க முடியும் என்பதால் பல நடிகைகளும் சினிமாவில் இருந்து ஒய்வு பெறும் சமயத்தில் தான் திருமண வாழ்க்கையை பற்றி யோசிக்கின்றனர். அந்தவகையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடித்துவரும் நித்யா மேனனும் திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கவில்லையாம்.
ஆனால் இவருடன் உஸ்தாத் ஹோட்டால், 100 டேய்ஸ் ஆப் லவ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் துல்கர் சல்மான், தன்னுடைய திருமண வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என அடிக்கடி நித்யா மேனனிடம் கூறுவாராம்.
இதுபற்றி நித்யா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, “துல்கர் ஒரு அக்மார்க் குடும்ப தலைவன்.. என்னையும் குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழையும்படி கூறி அவ்வப்போது கன்வின்ஸ் செய்ய முயற்சித்தார்” என கூறியுள்ளார். .