காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! | லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் | சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தபட்ட வழக்கு மலையாள திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் தொடர்புடையதாக கூறி நடிகர் திலீப் கைது செய்யப்பட, அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கலிங்கல் உள்ளிட்ட சில நடிகைகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் நடிகர் சங்கத்திலிருந்து விலகி 2017ல் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றையும் துவங்கினார்கள். இதில் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலரும் இணைந்தனர்.
ஏற்கனவே கடந்த வருடம் நடிகை மஞ்சு வாரியர் இந்த அமைப்பில் இருந்து விலகிய நிலையில் தற்போது இந்த அமைப்பில் இருந்து விது வின்சென்ட் என்கிற பெண் இயக்குனரும் விலகியுள்ளார். இவர் தற்போது கர்ணன் படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்துள்ள ரஜிஷா விஜயன் என்பவரை வைத்து மலையாளத்தில் ஸ்டாண்ட் அப்' என்கிற படத்தை இயக்கியவர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், தனது சொந்த மற்றும் அரசியல் காரணங்களுக்காக இதிலிருந்து விலகியதாக கூறிய இவர் தற்போது சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஒரு குற்றசாட்டை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நடிகர் திலீப்பிற்கு ஆதரவு கொடுத்து வந்த இயக்குனர் உன்னி கிருஷ்ணன் தயாரித்தத் 'ஸ்டான்ட் அப்' என்கிற படத்தை இயக்கியபோது பார்வதி, ரீமா கலிங்கல் உள்ளிட்ட பலரும் என்னை விமர்சித்தனர். எனக்கு ஆதரவும் கொடுக்கவில்லை. ஆனால் அதே திலீப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நடிகர் முகேஷுடன் நடிகை பார்வதி இணைந்து நடித்தபோது அதுபற்றி யாருமே வாய் திறக்கவில்லை.. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாகுபாடு காட்டப்படுகிறது.. அதனால் இனி அந்த அமைப்பில் தொடர்வதில்லை என முடிவு செய்து விலகியுள்ளேன்” என கூறியுள்ளார்.