திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
ஒருபக்கம் கொரோனா தொற்று வேகமாக பரவிகொண்டிருக்க, அதற்கு இணையாக திரையுலக பிரபலங்களை பற்றிய வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன. அந்தவகையில் சில தினங்களாக தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தம் சினிமாவை விட்டு விலகியுள்ளதாகவும் இனிமேல் சின்னத்திரை சீரியலில் மட்டும் தான் நடிக்கப்போகிறார் என்றும் ஒரு செய்தி பரவி வந்தது.
இந்தநிலையில் அந்த செய்தியில் உண்மையில்லை என கூறியுள்ள பிரம்மானந்தம், யார் இதுபோன்ற வதந்திகளை உருவாக்கி, பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் தற்போது ஊரடங்கு சமயத்தில் படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது உடற்பயிற்சி செய்வது, பேரன்களுடன் விளையாடுவது என சந்தோஷமாக பொழுதை போக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.