பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் | படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு |
சப்னோன் சே பாரே நைனா இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையானவர் பாயல் ராஜ்புட். 6 ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் சன்ன மேரேயா பஞ்சாபி படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். கார்த்திகேயாவின் ஆர்எக்ஸ் 100 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பஞ்சாபி மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் பாயல், கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ஏஞ்சல் படம் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கமலின் இந்தியன் 2 படத்தில் பாயல் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. ஆனால், அதனை பாயல் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் புஷ்பா மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறீர்களாமே என்று கேட்டு பலரும் எனக்கு கடந்த சில நாட்களாக மெசேஜ் அனுப்பி வருகிறார்கள். தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். எப்படி என்னைப் பற்றிய இந்த வதந்திகள் பரவுகின்றன என்று தெரியவில்லை. நான் எந்தப் படத்திலும் எந்தப் பாடலுக்கும் ஆடவில்லை. என்னை யாரும் இதுபோன்ற விஷயங்களுக்கு அணுகவும் இல்லை" என சற்று காட்டமாக பாயல் தெரிவித்துள்ளார்.
மேலும், 'நிறைய கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒன்றில் ஒப்பந்தம் ஆனதும் நிச்சயம் அப்டேட் செய்வேன்' எனவும் அவர் கூறியுள்ளார்.