Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர், நடிகைகள் சம்பளம் பாதியாக குறைப்பு: மலையாள நடிகர்கள் சங்கம் முடிவு

06 ஜூலை, 2020 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Actors-50-percent-salary-reduce---AMMA-decides

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சினிமா முடங்கி உள்ளது. தயாராகி முடிந்த பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் அந்த மாநில அரசு ஊரடங்கை கடுமையாக கடைபிடித்து வருகிறது. இதனால் படப்பிடிப்புக்கு அரசு அனுமதித்த நிலையிலும் முழு வீச்சில் படப்பிடிப்புகள் நடக்கவில்லை.

இனி மலையாள சினிமா மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றால் நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தில் 50 சதவிகிதத்தை குறைக்க வேண்டும் என்ற மலையாள தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை இதை கடுமையாக வலியுறுத்தி வந்தார். தங்களை கேட்காமல் சம்பளம் குறைப்பு குறிது முடிவெடுப்பதா என்று மலையாள நடிகர் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் கொச்சியில் மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் இடைவேளை பாபு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைப்பு தொடர்பாக விவாதம் நடந்தது. ஏற்கெனவே செயற்குழு உறுப்பினர்கள், முன்னணி நடிகர், நடிகைகளிடம் பேசியதை அடிப்படையாக கொண்டு கொரோனா வைரஸ் பிரச்சினை முடியும் வரை முன்னணி நடிகர், நடிகைகள் சம்பளத்தை 50 சதவிகிதம் குறைத்துக் கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு பின்னர் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பை நிறுத்தவில்லை ; ராம்கோபால் வர்மா விளக்கம்படப்பிடிப்பை நிறுத்தவில்லை ; ... தெலுங்கில் வெளியாகும் பலூன் தெலுங்கில் வெளியாகும் பலூன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in