Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் பகீர்

05 ஜூலை, 2020 - 18:54 IST
எழுத்தின் அளவு:
I-have-also-feels-some-time-to-commit-suicide

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து பலரும் தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் குறித்து மனம் திறந்து வருகின்றனர். அந்தவகையில் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருக்கும் யுவன் சங்கர் ராஜாவும் தனது மன அழுத்தம் குறித்து சமூகவலைதளத்தில் பேசியுள்ளார்.

ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த அதிர்ச்சித் தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். ரசிகர் ஒருவர், அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தார் யுவன். அதில், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கு தற்கொலை எண்ணம் அதிகம் இருந்தது. அதையெல்லாம் கடக்க இஸ்லாம் தான் எனக்கு உதவியது” என யுவன் தெரிவித்துள்ளார்.





கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன், தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு ஷாப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார் யுவன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவனின் மதமாற்றம் குறித்து சமூகவலைதளத்தில் சில சர்ச்சைப் பதிவுகள் வெளியாகின. அதற்குப் பதிலடி தரும் வகையில் யுவனின் மனைவி விளக்கமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் தான் யுவன் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
மகனுக்காக விக்ரம் எடுத்த அதிரடி முடிவுமகனுக்காக விக்ரம் எடுத்த அதிரடி ... சினிமா நடிகைகளுக்குப் போட்டியாக களமிறங்கும் டிவி நடிகைகள் சினிமா நடிகைகளுக்குப் போட்டியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

Tamilnesan - Muscat,ஓமன்
07 ஜூலை, 2020 - 22:22 Report Abuse
Tamilnesan அடுத்த வருடம் கிறிஸ்தவராக மதம் மாறி, அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து அதற்கு ஒரு கதை சொல்வார், வருடம் ஒரு தாயை தேடி செல்வது இவரது வாடிக்கை. இவருக்கு பின்னால் சில அறிவிலிகள் இருக்கும்வரை, இது ஒரு தொடர்கதை.
Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
07 ஜூலை, 2020 - 11:40 Report Abuse
Enrum anbudan பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்று ஒன்று இருந்தது அதை இல்லாமல் செய்து விட்டார்கள். அது இருந்து இருந்தால் இவன் மாதிரி தருதலைகள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். அவ்வாறான வகுப்புகளில் கடவுளை பற்றிய புரிதல்களை மாணவர்கள் மத்தியில் எடுத்து கூறுவார்கள் . ஆசிரியர்களின் பணி மிகச்சிறப்பாக இருந்தது நாற்பது வருடங்களுக்கு முன்னர் .
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
07 ஜூலை, 2020 - 00:58 Report Abuse
Rajagopal அப்போ இஸ்லாம் மதத்தினர் தற்கொலை படை எதனால் வைத்திருக்கிறார்கள்?
Rate this:
vns - Delhi,இந்தியா
06 ஜூலை, 2020 - 15:03 Report Abuse
vns "எவனோ ஒருத்தன் அவனுக்கு பிடிச்ச விஷயத்தை செய்ததுக்கு", சரிதான். ஆனால் இதே யாரோ ஒருவன் எங்கேயோ உலக மூலையில் அவனுக்குப் பிடித்த ஓவியத்தை வரைந்தபோது எதுக்குடா இங்கே தம்தோழகத்தில் கொலை செய்தீர்கள். உன் அறிவை வளர்க்க உனக்கு தோன்றவில்லையா..
Rate this:
vns - Delhi,இந்தியா
06 ஜூலை, 2020 - 14:59 Report Abuse
vns செய்து இருக்கலாம்.. அப்படி நடந்திருந்தால் யாரும் உன்னுடைய இல்லாமையை கவனித்து இருக்க மாட்டார்கள்.
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in