நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் தியேட்டர்கள் திறக்கும் சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை. இதனால் எடுத்து முடிக்கப்பட்ட படங்களை வந்த வரையில் லாபம் என்கிற எண்ணத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பொன்மகள் வந்தாள், பெண்குயின், யாதுமாகி நின்றாய் படங்களுக்கு பிறகு அடுத்து காக்டாயில், டேனி போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. இந்நிலையில் ஆர்யா, அவரது மனைவி சாயிஷா நடித்துள்ள படம் டெடி. இதில் சாக்ஷி அகர்வால், சதிஷ், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் டெடி பியர் பொம்மை முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இதற்கான முயற்சியை இப்பட தயாரிப்பாளர் ஸ்டூடியே க்ரீன் ஞானவேல் ராஜா முன் எடுத்துள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.