டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா | ஓடிடி-யில் வெளியாக உள்ளதா மாஸ்டர்? | சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் |
தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படங்களில் முக்கியமான ஒரு படம் என 2003ம் ஆண்டு வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தைச் சொல்லலாம். செல்வராகவன் இயக்கத்தில், அவரது அப்பா கஸ்தூரிராஜா தயாரிப்பில், தம்பி தனுஷ் நடிக்க உருவான படம் அது. செல்வராகவனின் முதல் படமும் அதுதான்.
அப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். பின்னர் அவரையே 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2010ல் விவாகரத்து பெற்றார் செல்வராகவன்.
நேற்று 'காதல் கொண்டேன்' படம் வெளிவந்து 17 வருடங்கள் ஆனதைப் பற்றி தனுஷும், அவரது ரசிகர்களும் நினைவு கூர்ந்து பல பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தனுஷ் கூட தன் முகம் தெரியாத, பக்கத்தில் சோனியா அகர்வால் முகமும் தெரியாத அளவிற்கு படத்தின் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.
படத்தின் நாயகி சோனியா அகர்வாலும் படத்தின் நினைவுகளை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். “கடவுளுக்கு நன்றி, மயக்கும் தமிழ்நாடு, செல்வராகவன், மிஸ்டர் கஸ்தூரிராஜா, அற்புதமான ரசிகர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி 17 வருடங்கள் ஆகிறது. தனுஷ், மற்றும் 'காதல் கொண்டேன்' படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத, எந்தப் படத்துடனும் ஒப்பிட முடியாத ஒரு படம்,” எனக் கூறியுள்ளார்.
சோனியாவின் டுவீட்டிற்கு செல்வராகவனோ, தனுஷோ எந்த பதிலும் அளிக்கவில்லை. மாறாக ரசிகர்கள் அந்த டுவீட்டை லைக் செய்தும், ரிடுவீட் செய்தும் தங்கள் வரவேற்பைத் தெரிவித்துள்ளார்கள்.