Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செல்வராகவனுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்: தனுஷ்

04 ஜூலை, 2020 - 18:35 IST
எழுத்தின் அளவு:
I-am-always-indebted-to-my-brother-selva-says-Dhanush

நடிகர் தனுஷின் 2வது படமான காதல் கொண்டேன் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அண்ணனும், காதல் கொண்டேன் படத்தின் இயக்குனருமான செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில், "அண்ணன் செல்வராகவனுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்", என அவர் கூறியுள்ளார்.

அண்ணன் செல்வராகவன் மீது தனுஷுக்கு எப்போதுமே மரியாதை அதிகம். "என் அண்ணன் இல்லை என்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை", என பலமுறை பல மேடைகளில் தனுஷ் கூறியிருக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தனுஷ் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை. அந்த படத்தை செல்வராகவன் தான் இயக்கினார் என்றாலும், சில காரணங்களுக்காக தந்தை கஸ்தூரிராஜாவை தான் இயக்குனராக வெளிக்காட்டிக் கொண்டனர். படம் வெற்றி பெற்ற பிறகு தான் செல்வராகவன் பெயர் வெளியே தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செல்வராகவன் இயக்கிய படம் தான் காதல் கொண்டேன். வினோத் எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து அசர வைத்தார் தனுஷ். இந்த படம் தான் தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ருதியின் மீசை ஆசைஸ்ருதியின் மீசை ஆசை குரங்குகளுடன் பிரியா செய்த சேட்டை குரங்குகளுடன் பிரியா செய்த சேட்டை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

jayanantham - tamilnaadu ,இந்தியா
06 ஜூலை, 2020 - 01:24 Report Abuse
jayanantham எதற்க்காக கொடுத்தது........? எவ்வளவு கொடுத்தது........?? இந்த ரகசியம் பற்றிய தகவலும் மதிப்பும் இடைத்தரகர் sharvintej க்கு மட்டும்தான் தெரியும். அதை சொன்னா மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
Rate this:
05 ஜூலை, 2020 - 09:47 Report Abuse
kamal singapore என்ன விலை ???
Rate this:
Sharvintej - madurai,இந்தியா
05 ஜூலை, 2020 - 05:33 Report Abuse
Sharvintej அதற்காக தமிழகம் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in