Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா நிவாரண உதவி : முதலிடத்தில் சோனு சூட்

04 ஜூலை, 2020 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Corona-Help-:-Sonu-Sood-in-No-1-Place

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. நாடு முழுவதும் இது பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வைத்தது.

புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் அவர்கள் வேலை பார்த்து வந்த மாநிலங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்புவதில் ஹிந்தி நடிகர் சோனு சூட் மிகவும் தீவிரமாகப் பணியாற்றினார். மும்பையில் அப்படி தங்கியிருந்த பலரையும் தனது சொந்த செலவில் பேருந்துகளில், ரயில்களில், ஏன் சிலரை விமானத்தில் கூட அனுப்பி வைத்திருக்கிறார்.

எந்த முன்னணி ஹீரோக்களும் செய்யாத ஒரு விஷயத்தை வில்லன் நடிகரான சோனு சூட் செய்து மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றார்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிரான்ட்ஸ் என்ற அமைப்பு கொரானோ நிவாரண உதவியில் எந்த பிரபலம் அதிகமாக உதவி வருகிறார் என்பது குறித்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. அதில் 78.5 சதவீத கார்ப்பரேட் ரேட்டிங் பெற்றும், 86.4 சதவீத பொதுமக்கள் ரேட்டிங் பெற்றும் சோனு சூட் முதலிடம் பெற்றுள்ளார்.

25 கோடிக்கும் மேல் நிவாரண உதவிகளை வழங்கிய அக்ஷய்குமார் 68.4 சதவீத கார்ப்பரேட் ரேட்டிங், 78.7 சதவீத பொதுமக்கள் ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அமிதாப்பச்சன், ஆயுஷ்மான் குரானோ மூன்றாவது, நான்காவது இடங்களிலும், நடிகை டாப்சி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

ஹிந்தி நடிகர்கள் பலரும் பெரிய அளவில் உதவி செய்துள்ளனர். தமிழ் நடிகர்கள் சிலர் மட்டுமே பிரதமரின் நிவாரண உதவி, முதல்வர் நிவாரண உதவி, பெப்சிக்கு உதவி என அதோடு நிறுத்திக் கொண்டனர். நேரடியாக களத்தில் இறங்கி பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
60 மில்லியனைக் கடந்த 'வாத்தி கம்மிங்'60 மில்லியனைக் கடந்த 'வாத்தி ... நண்பன் விஜய் : சிம்ரனின் 23 ஆண்டு நினைவலைகள் நண்பன் விஜய் : சிம்ரனின் 23 ஆண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
05 ஜூலை, 2020 - 14:36 Report Abuse
Mirthika Sathiamoorthi அதேமாதிரி IPL நடத்தி கோடியில் பணம் சம்பாரிக்கும் கிரிக்கட் வாரியம் அதில் விளையாடும் வீரர்கள்....வீரர்களை ஏலம் எடுக்கும் பனமுதலைகள்...திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அவங்களுக்கு வட்டிக்கு கொடுக்கும் பைனான்சியர்...அவங்க பினாமியாக இருப்பவங்க...கார்ப்பரேட் முதலாளிகள்..மாசம் மாசம் கிட்டத்தட்ட ஜம்பதாயிரம் முதல் ஒருலட்சம் மேல் சம்பாதிக்கும் நம்மை போன்ற சாதாரண வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைங்கள்.. .இவங்கெல்லாம் இப்போ அயல் கிரகம் போயிட்டனாலா உள்ளூரில் இருக்கும் நம் அறிவுக்கண்ணுக்கு தெரியும் தமிழ் நடிக நடிகையினரை மட்டும் காறித்துப்புவோம்..சரிதானே? நம்ம வீட்டுக்கு பக்கம் நம் கண்முன் அடிக்கடி பார்க்கும் டீக்கடைக்காரர், மாளிகைக்கடைக்காரர், இஸ்திரி பெட்டிக்காரர் ,வண்ணான் டெயிலர் மெக்கானிக் கூலித்தொழிலாளி நமது அண்டைவீட்டார்.. இவங்களுக்கு நாம உதவுனோமா? அட்லீஸ்ட் இவங்க எப்புடி இருக்காங்கனாவது தெரியுமா? மூச்...நடிகன் உதவுனானா? நல்ல சாட்டையடி தமிழ் நடிகை நடிகனுக்கு ...
Rate this:
thamodaran chinnasamy - chennai,இந்தியா
05 ஜூலை, 2020 - 08:29 Report Abuse
thamodaran chinnasamy இவர்களின் தரம் அவ்வளவுதான், சொல்ல வேறு என்ன இருக்கிறது .
Rate this:
04 ஜூலை, 2020 - 16:43 Report Abuse
rasheed நல்ல சட்டை அடி தமிழ் நடிகை நடிகர் சோனு சுட் அவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் முடிந்த அளவு உதவி செய்யலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in