தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் |
ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் இணைந்து தயாரிக்க அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கத்தில் அஜய் தேவகன், பிரியாமணி மற்றும் பலர் நடிக்கும் 'மைதான்' படத்தை அடுத்த வருடம் 2021 ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப் போகிறார்களாம். தென்னிந்திய நடிகையான பிரியாமணி இப்படத்தில் அஜய் தேவகன் மனைவியாக நடிக்கிறார். மேலும் விளையாட்டைப் பற்றிய படம் என்பதாலும், பிரியாமணி படத்தில் உள்ளதாலும் தென்னிந்திய ரசிகர்களையும் இப்படம் கவரும் என்ற நோக்கில் இங்கு வெளியிட உள்ளார்கள்.
பிரியா மணி கதாபாத்திரத்தில் முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ்தான் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவர் தன்னுடைய உடலை இளைத்து, மும்பையில் இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அஜய் தேவகனுடன் ஒப்பிடும் போது கீர்த்தி மிகவும் இளமையாகத் தெரிந்ததால் தயாரிப்பாளர் போனிகபூரும், கீர்த்தியும் ஒருவருக்கொருவர் உடன்பட்டு படத்திலிருந்து கீர்த்தி விலகியதாகச் சொல்கிறார்கள்.
இதனால், கீர்த்தியின் ஹிந்திப் பட அறிமுகம் ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது.